Posts

Showing posts from September, 2017

சிட்டுக் குருவிக்கு நேர்ந்த கதி ?

Image
இணையத்தில் படித்த கதை ..... google image ஒரு பெரிய மரம். சிட்டுக் குருவிகள் கும்மாளம்  அடித்துக் கொண்டிருந்தது. அருமையான வசந்த காலம் அது..  கும்மாளத்திற்கு சொல்ல  வேண்டுமா ? சுகமான காலை  நேர வெயிலில் , உயரத்தில் கருடன்  ஒன்று பறந்துக் கொண்டிருந்தது.  அதன் கண்களிலும்  சிட்டுக் குருவிகளின் கும்மாளம் கண்ணில் பட்டது. சட்டென்று, கருடன் கண்ணில்  அவரும்  பட்டார். இது அவராயிருக்குமோ...?  என்கிற சந்தேகத்துடன்  உற்றுப்  பார்த்தது. அவர் வாகனத்தைப்  பார்த்ததும் சந்தேகம்  தெளிவுற்றது கருடனுக்கு. ஆமாம்......அவரேதான்.....எமதர்ம ராஜா . எருமை மேல் உல்லாசமாய் சவாரி செய்து யார் உயிரை வாங்கப் போகிறாரோ   என்று நினைத்துக் கொண்டே கருடன் பறந்தது. அவர் கண்ணில் நாம் படாமலிருந்தால் போதும்  என்று நகரப் போனது.  ஆனால் ஆர்வம் விட்டால் தானே ! யாருக்காக இப்படி  செல்கிறார் என்று பார்க்க ஆரம்பித்தது கருடன். சிட்டுக் குருவிகள் கும்மாளம் செய்து கொண்டிருந்த மரத்தின் அருகில்  வந்ததும்  எமன்  எருமையின்  லகானை  இழுத்து நிறுத்தி விட்டார். நிறுத்தி விட்டு வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார